மற்றுமொரு மைல்கல்… உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 1,500 ரன்களை கடந்த ரோகித் ஷர்மா!

கேப்டன் ரோகித் ஷர்மா
கேப்டன் ரோகித் ஷர்மா

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 1,500 ரன்களை கடந்து ரோகித் ஷர்மா மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இதில் ரோகித் ஷர்மா அதிரடியாக ஆடி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தார். 4 சிக்ஸர், 4 பவுன்டரிகளை விளாசிய அவர் 47 ரன் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ரோகித் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 1,500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 27 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள அவர், 7 சதம், 6 அரைசதங்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 47 ரன் எடுத்த நிலையில், அவர் 1528 ரன் கடந்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி 1,500 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2,278 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 1,743 ரன்களுடன் ரிக்கி பான்டிங் இரண்டாவது இடத்திலும், 1,610 ரன்களுக்கு மேல் குவித்து விராட் கோலி 3வது இடத்திலும், 1,532 ரன்களுடன் குமார சங்கக்காரா 4வது இடத்திலும் உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


மும்பை காவல் துறைக்கு திடீர் மிரட்டல்: இந்தியா - நியூசிலாந்து போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

நரி, அமுல் பேபி என தினேஷ்- விஷ்ணு மோதல்:பிக் பாஸ் இல்லத்தில் அதகளம்!

'பிரதமர் மோடிதான் சிறந்த நடிகர்' - நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்!

என்.சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடையா?: உயர் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in