இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் ஆனார் ராேகித் சர்மா!

துணை கேப்டன் பும்ரா; ரஹானே, புஜாரா நீக்கம்
ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ரஹானே, புஜாரா நீக்கப்பட்டுள்ளனர். டி20 போட்டி துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி அண்மையில் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார். கேப்படன் பதவியில் இருந்து கோலி விலகியதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலிதான் காரணம் என்ற சர்ச்சையை கிளம்பியது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இருந்து இந்திய அணி வீரர்கள் அஜிங்கியா ரஹானே மற்றும் சேத்தேஷ்வர் புஜாரா நீக்கப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கான துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் டி20 போட்டிக்கான துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான சர்வதேச டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டி ஆகிய இரண்டு போட்டி தொடர்களிலும் ஷர்துல் தாக்குருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த தேர்வு குழு தலைவரான சேத்தன் சர்மா இன்று அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in