ரோகித் சர்மா
ரோகித் சர்மா

200 கிமீ வேகத்தில் பறந்த கார்... ரோகித் சர்மாவை தெறிக்கவிட்ட போக்குவரத்து போலீஸார்

மணிக்கு 200 கிமீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இந்தநிலையில், காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக ரோகித் சர்மாவுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோகித் சர்மா மும்பையில் இருந்து புனே நகருக்கு மும்பை-புனே அதிவிரைவுசாலையில் தனது லம்போர்கினி சொகுசு காரில் சென்றிருக்கிறார். அப்போது, அவர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 200 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக கார் ஓட்டி சென்ற ரோகித் சர்மா, ஒரு கட்டத்தில் 215 கி.மீ வேகத்தில் சென்றுள்ளார் எனவும் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து, அவருக்கு மூன்று விதமான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோகித் சர்மா நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றது குறித்து கவலை தெரிவித்த போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், அவர் போலீஸ் துணையுடன் குழுப் பேருந்தில் பயணிக்க பரிந்துரைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023 புத்தாண்டு தினத்தையொட்டி, இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் அதிவேகமாக கார் ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கினார். இப்போதுதான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அந்த வகையில், ரோகித் சர்மா இப்படி அதிவேகமாக கார் ஓட்டிச் சென்ற விவகாரம் ரசிகர்களை மிகவும் கவலைக்கொள்ள செய்துள்ளது. மேலும், இதுபோன்று மீண்டும் நடந்துகொள்ள வேண்டாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ரோகித்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in