ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்… இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா மேலும் ஒரு சாதனை!

கேப்டன் ரோகித் ஷர்மா
கேப்டன் ரோகித் ஷர்மா

ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா படைத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பல புதிய சாதனைகளை படைத்து வருகிறார். அதிலும் இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே அவரது சாதனைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் ஷர்மா 54 பந்துகளில் 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் இந்த ஆண்டு அவர் 59 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இது ஒரு ஆண்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச சிக்ஸர் ஆகும்.

இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 58 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா முறியடித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு கிறிஸ் கெயில் 56 சிக்ஸர் அடித்து 3வது இடத்திலும், முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 48 சிக்ஸர்கள் அடித்து 4வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், இன்றைய போட்டியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர் அடித்த கேப்டன் என்ற மற்றுமொரு மைல்கல்லையும் ரோகித் ஷர்மா எட்டியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா 23 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் 22 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை இன்று ரோகித் முறியடித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in