
தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் 500 ரன் கடந்த ஒரே வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்துள்ளார்.
இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர்.
அதிலும் கேப்டன் ரோகித் ஷர்மா 54 பந்துகளில் 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் 503 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அவர் 648 ரன் எடுத்திருந்தார். இதன் மூலம் ரோகித் அடுத்தடுத்த உலகக் கோப்பை தொடர்களில் 500 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் ஷர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2003ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் 500 ரன்களை கடந்திருந்தார். அதன் பின்னர் இரண்டு முறை 500 ரன்களை கடந்த இரண்டாவது வீரராக ரோகித் ஷர்மா உள்ளார். மேலும், உலகக் கோப்பை தொடரில் 500 ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் ரோகித் ஷர்மா படைத்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!