ரோகித் சர்மா கேப்டன் பதவியே வேண்டாம் என்றார்:மனம் திறந்த கங்குலி!

சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா
சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா

ரோகித் சர்மாவை இந்திய கேப்டன் பொறுப்பை வற்புறுத்தியே ஏற்க வைத்ததாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்றாக கருதப்படுவது விராட் கோலி கேப்டன் பதவி பறிக்கப்பட்டதை சொல்லலாம். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை படுதோல்விக்கு பிறகு கோலி, டி20 அணிக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ரோகித் சர்மா கேப்டனாக்கப்பட்டார்..

அதே ஆண்டு இறுதியில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படு ரோகித் சர்மாவிடம் வழங்கப்பட்டது. அந்த சமயத்தில் விராட் கோலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இது மாபெரும் சர்ச்சையை எழுப்பியது.

ரோகித் சர்மா
ரோகித் சர்மா

இந்நிலையில், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்க தயங்கியதாகவும், கிட்டத்தட்ட வலிந்து அவருக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டதாகவும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவின் தலைமையிலான அணியின் சாதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து பதிலளித்த அவர், ஆரம்பத்தில் ரோகித் சர்மா கேப்டன் பதவியே வேண்டாம் என்றார். விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், தேர்வுக்குழு ரோகித் சர்மாவின் பெயரை பரிந்துரைத்தது.

ஆனால், ரோகித் அதனை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால், தேர்வுக் குழு அவரது பெயரை பொதுவெளியில் அறிவித்து பின் ஏற்க செய்தது என்று கங்குலி கூறியுள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்த அழுத்தமே ரோகித் அப்பதவி தனக்கு வேண்டாம் என கூறியதற்கு காரணம் என கூறிய கங்குலி, அவர் மீது பிசிசிஐ வைத்த நம்பிக்கையின் பலன்களைத்தான் உலகக் கோப்பையில் அனைவரும் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in