சாதனை படைத்த ரோஹன் போபன்னா... உலக அளவில் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார்!

ரோஹன் போபன்னா
ரோஹன் போபன்னா
Updated on
2 min read

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபன்னா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ரோஹன் போபன்னா - மேத்யூவ் எப்டன்
ரோஹன் போபன்னா - மேத்யூவ் எப்டன்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு சுற்று போட்டிகள் நிறைவடைந்து, நேற்று முதல், கால் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபன்னா - அமெரிக்காவின் மேத்யூவ் எப்டனுன் இணைந்து - அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சேல் - ஆண்டர்ஸ் மோல்டேனி இணையை எதிர்கொண்டது.

ரோஹன் போபன்னா - மேத்யூவ் எப்டன்
ரோஹன் போபன்னா - மேத்யூவ் எப்டன்

பரபரப்பான இந்த ஆட்டத்தில் போபன்னா - மேத்யூவ் இணை 6-4, 7-6 என்ற நேர் செட்களில் அர்ஜென்டினா இணையை வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் ரோஹன் போபன்னா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது, 43 வயதாகும் ரோஹன், ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கலந்துகொள்ளும் முன் சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்தார். இன்றைய வெற்றி மூலம் அவர் அமெரிக்காவின் ராஜீவ் ராமை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.

ராஜீவ் கடந்த 2022-ம் ஆண்டு முதல் முதல் இடத்தில் நீடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹன் - மேத்யூவ் இணை நாளை நடைபெறும் அரையிறுதியில் சீனாவின் ஜாங் ஜின்ஜென் - செக் குடியரசின் தாமஸ் மச்சாக் இணையை எதிர்கொள்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in