கால்பந்தாட்ட வீரர் நெய்மரின் தோழி வீட்டில் கொள்ளை; பக்கத்து வீட்டு இளைஞர் கைது!

தனது தோழியுடன் நெய்மர்
தனது தோழியுடன் நெய்மர்

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மரின் தோழியின் வீட்டில் ஆயுதமேந்திய மர்ம கும்பல் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டை சேர்ந்தவரும், உலகின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர் நெய்மர் ஜூனியர். இவரது தற்போதைய தோழி புருனா பியான்கார்டி. இந்த ஜோடிக்கு மாவி என்ற 1 மாத பெண் குழந்தை உள்ளது. புருனா பியான்கார்டி சா பாலோ நகரில் உள்ள கோடியா என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று புருனாவும், அவரது குழந்தையும் வெளியே சென்றிருந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவத்தின் போது வீட்டில் புருனாவின் பெற்றோர் மட்டுமே இருந்ததாகவும், அவர்களை கட்டிப்போட்ட அந்த கும்பல் வீட்டில் உள்ள விலையுர்ந்த நகை, வாட்ச் உள்ளிட்ட மற்ற பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த போலீஸார், வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

அதில் கொள்ளை கும்பல் தப்பி சென்ற கார் எண்ணை வைத்து அது புருனாவின் பக்கத்து வீட்டுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவரது மகன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் 20 வயது இளைஞரை கைது செய்து, அவர் கொள்ளையடித்து சென்ற பொருட்களையும் மீட்டனர். இந்த சம்பவம் கால்பந்தாட்ட ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in