சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் வீரரின் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

 நவீன் உல் ஹக்
நவீன் உல் ஹக்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நவீன் உல் ஹக்
நவீன் உல் ஹக்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக். நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட இளம் வீரர்.

24 வயதான நவீன் உல்-ஹக் ஆப்கானிஸ்தான் அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்களையும், 27 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி
ஆப்கானிஸ்தான் அணி

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி இந்தத் தொடரில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் அரைஇறுதி வாய்ப்பை இழந்தது. அத்துடன் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த போட்டியில் முன்னாள் உலக சாம்பியன்களான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாறு படைத்தது.

இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்-ஹக் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in