டூபிளசிஸ், விராட் கோலியின் அதகள ஆட்டம்; 218 ரன்கள் குவித்த பெங்களூரு - வெற்றிபெறுமா சென்னை?

கோலி டூபிளசிஸ்
கோலி டூபிளசிஸ்

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களம் இறங்கிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி, அதிரடியாக விளையாடி நான்கு சிக்ஸர் 3 பவுண்டரி என 29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து சாண்ட்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

படிதார் கேமரூன் கிரீன்
படிதார் கேமரூன் கிரீன்

கோலி அவுட்டானாலும் மறுபக்கம் டுபிளசிஸ் சென்னை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.இவர் மூன்று சிக்சர், மூன்று பவுண்டரி என 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து களமிறங்கிய படிதார் மற்றும் கேமரூன் கிரீன் கூட்டணி அதிரடி கிளப்பியது. ஆனாலும் படிதார் 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்தபோது ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 14 ரன்களிலும், மேக்ஸ்வெல் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணி இப்போது 219 ரன்கள் என்ற இலக்குடன் ஆட உள்ளது.

கோலி தோனி
கோலி தோனி

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெற்றுவிட்டது. ப்ளே ஆஃப்- க்குத் தகுதி பெற உள்ள கடைசி அணி யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான லீக் போட்டியாக இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆட்டம் உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலே நேரடியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் சென்னை தகுதி பெறும். அதே நேரத்தில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணி நிர்ணயிக்கும் இலக்கை பெங்களூரு அணி 18.1 ஓவரில் எட்டினால் ப்ளேஆஃப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெறும். இல்லை என்றால் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்த வேண்டும், இவ்வாறு வீழ்த்தினால் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மேற்குறிப்பிட்ட வித்தியாசங்களைவிடக் குறைவான வித்தியாசங்களுடன் பெங்களூரு அணி வெற்றிபெற்றாலும்கூட, சென்னை அணியே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in