இறுதிப் போட்டிக்கு தயாராகும் அஸ்வின்… ரோகித் ஷர்மாவின் திட்டம் என்ன?

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றால் ஒரு திட்டமும், ஆஸ்திரேலியா தகுதி பெற்றால் ஒரு திட்டமும் என இரண்டு திட்டங்களை ஏற்கெனவே இந்தியா வகுத்து வைத்திருந்தது.

இந்திய  வீரர்கள் பயிற்சி
இந்திய வீரர்கள் பயிற்சி

அதன்படி தற்போது ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதால் இந்தியாவின் பிளேயிங் லெவனின் ஒரு அதிரடி மாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள கடுமையாக தடுமாறுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் நேற்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கூட ஆஸ்திரேலியா வீரர்கள் சுழற்பந்து வீச்சு தடுமாற்றம் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியில் வார்னர், டிராவிஸ் ஹெட் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருப்பதால் தமிழக வீரர் அஸ்வினை அணிக்கு கொண்டு வர ரோகித் ஷர்மா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு ஏற்றார் போல் அஸ்வின் இன்று அகமதாபாத்தில் பயிற்சியில் ஈடுபட்டார்.

ஏற்கெனவே லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொண்ட போது அஸ்வினை ரோகித் ஷர்மா சேர்த்தார். இதனால் அஸ்வின் இறுதிப் போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதற்காக, சூர்யகுமார் யாதவ் அணியில் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் இந்திய அணி தொடர்ந்து ஒரே அணியுடன் விளையாடி வருகிறது. அதனால், இந்த காம்பினேஷனை மாற்ற வேண்டாம் என்றும் இதே வீரர்களை வைத்து விளையாட வேண்டும் என்றும் சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அஸ்வின் அணிக்குள் வருவாரா இல்லை இந்தியா அதே வீரர்களை வைத்துதான் விளையாடுமா என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!

பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!

விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!

வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!

குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in