ரஞ்சி கோப்பை கிரிக்கெட்; வெல்லும் அணிக்கு ரூ.1 கோடி பரிசு... வீரர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்!

ஜெகன்மோகன் ராவ்
ஜெகன்மோகன் ராவ்
Updated on
2 min read

ரஞ்சி கோப்பையை வெல்லும் அணிக்கு ஒரு கோடி ரூபாயும், வீரர்களுக்கு தலா ஒரு பிஎம்டபிள்யூ காரும் வழங்கப்படும் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சம்மேளன தலைவர் ஜெகன்மோகன் ராவ் அறிவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை
ரஞ்சி கோப்பை

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால், இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து விளையாட வேண்டும் என்பதே இளைஞர்களின் கனவாக இருக்கிறது. முன்பு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடினால், இந்திய அணியில் இடம்பிடித்து விடலாம் என்கிற நிலை இருந்தது. பல வீரர்கள், ரஞ்சி போட்டியில் சாதனைப் படைத்தவர்களே இந்திய அணியில் இடம்பிடித்தனர். இந்த நிலையானது ஐபிஎல் போட்டிகள் வந்த பிறகு மாறியது. ஐபிஎல் போட்டியில் சாதனைகளை படைத்தால், இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்பது தற்போதைய இளம் கிரிக்கெட் வீரர்களின் மனநிலையாக உள்ளது.

ஜெகன்மோகன் ராவ்
ஜெகன்மோகன் ராவ்

இதனால் இப்போது ரஞ்சி கோப்பைக்கு முக்கியத்துவம் குறைந்து வருகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக நேற்று அறிவித்த மனோஜ் திவாரி கூட, ரஞ்சி போட்டிக்கு பிசிசிஐ முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்போது ரஞ்சிக் கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. வரும் 23-ம் தேதி காலிறுதி போட்டிகள் தொடங்குகிறது. இந்தாண்டு ரஞ்சி கோப்பையை வென்றால் அணிக்கு ஒரு கோடியும், வீரர்களுக்கு தலா ஒரு பிஎம்டபிள்யூ காரும் வழங்கப்படும் என்று ஹைதராபாத் கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் ஜெகன்மோகன் ராவ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஏனெனில், கடந்த 1986-87ம் ஆண்டுதான் ஹைதராபாத் அணி ரஞ்சி கோப்பையை வென்றது. அதன் பிறகு 37 ஆண்டுகளாக அந்த அணியால் ரஞ்சி கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால், கண்டிப்பாக இந்தாண்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், வீரர்களுக்கு அதிரடியாக பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சி போட்டிக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், இந்த மெகா பரிசு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in