இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தொடர்வாரா ராகுல் டிராவிட்?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் இந்த உலகக் கோப்பை தொடருடன் முடிவடைகிறது. இந்நிலையில், மீண்டும் அவர் பயிற்சியாளராக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. இதனையடுத்து, டி20 அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியும், பயிற்சியாளாராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவியும் முடிவுக்கு வந்தது.

அப்போது, தேசிய கிரிக்கெட் அகாடமியில் எதிர்கால இளம் வீரர்களை உருவாக்கி வந்த ராகுல் டிராவிட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின், அவரது பயிற்சியின்கீழ் இந்திய அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு வெற்றிகளைப் பெற்றுள்ளது.

உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் பல இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டனர். இரண்டு ஆண்டுகளாக உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்புகளில் இருந்த இந்திய அணி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியே காணாத அணியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியுடன் ராகுல் டிராவிட்டின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

கேப்டன் ரோகித் ஷர்மாவுடன், டிராவிட்
கேப்டன் ரோகித் ஷர்மாவுடன், டிராவிட்

இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பிசிசிஐ தரப்பில் ராகுல் டிராவிட் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ராகுல் டிராவிட் பிசிசிஐயின் இந்த கோரிக்கையை ஏற்று மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவாரா அல்லது உலகக் கோப்பை வெற்றியுடன் தனது பயிற்சியாளர் பதவிக்காலத்தை நிறைவு செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லுமா என்ற கேள்விக்கும், ராகுல் டிராவிட் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர்வாரா என்ற கேள்விக்கும் பதில் கிடைத்துவிடும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in