டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்- பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

பிவி சிந்து
பிவி சிந்து

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து - உலகின் நம்பர் 1 வீராங்கனையும் ஸ்பெயிபினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.

முதல் செட்டை கரோலினா 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதையடுத்து இரண்டாவது சுற்றில் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும் கடைசி செட்டில் சுதாரித்த கரோலினா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21-7 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 1-2 என்ற செட் கணக்கில் சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in