ஆசிய விளையாட்டுப் போட்டி- காலிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

பி.வி.சிந்து
பி.வி.சிந்து

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் பிரிவில் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்து வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் பிங்ஜியோவ் ஹே ஆகியோர் காலிறுதி சுற்றில் களம் இறங்கினர். இதில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சீன வீராங்கனை பிங்க்ஜியோவ், 47 நிமிடங்களில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். 21-16, 21-12 என்ற நேர் செட்களில் சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

இதே போல் இந்திய மகளிர் பேட்மிண்டன் அணியும், காலிறுதிச்சுற்றில் தாய்லாந்து அணியிடம் 3-0 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவிற்கான பதக்க வாய்ப்புகள் முற்றிலும் மங்கி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in