`அரபிக்குத்து' பாடலுக்கு பி.வி.சிந்து வேற லெவல் டான்ஸ் (வீடியோ)

`அரபிக்குத்து' பாடலுக்கு பி.வி.சிந்து வேற லெவல் டான்ஸ் (வீடியோ)

`அரபிக்குத்து' பாடலுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலக்கலாக டான்ஸ் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள `பீஸ்ட்' படம் அண்மையில் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள `அரபிக்குத்து' பாடல் செம வைரலானது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். அண்மையில், `அரபிக்குத்து' பாடலுக்கு நடிகை சமந்தா போட்ட டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நடிகர்கள், நடிகைகள் என பலர் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிலையில் தற்போது, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து டான்ஸ் போட்டுள்ளார்.

`அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள பி.வி.சிந்து, இந்த வீடியோவை தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எனக்கு பேட்மிண்டன் மட்டுமின்றி டான்ஸும் ஆடத் தெரியும் என நிரூபித்துள்ளார் பி.வி.சிந்து.

Related Stories

No stories found.