
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை 70 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணிக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது அரையிறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறுதிப்போட்டியை காண பிரதமர் மோடி வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பிரதமர் அலுவலகமோ அல்லது இந்திய கிரிக்கெட் வாரியமோ இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!
‘ஜெயிலர் 2’ - மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணி!
பதற்றம்! சிப்காட்டுக்கு எதிராக போராட்டம்; விவசாயிகள் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஷமி மீது கேஸ் போட மாட்டீங்கள்ல? மும்பை போலீஸை ஜாலியாக வம்பிழுத்த டெல்லி போலீஸ்!
வாட்ஸ் அப் வழங்கும் கசப்பான புத்தாண்டு ‘பரிசு’... அன்லிமிடெட் சாட் பேக்கப்புக்கு செக்!