வெற்றிமேல் வெற்றி குவிக்கும் பிரக்ஞானந்தா: நார்வே செஸ் ஓபனில் பட்டம் வென்று அசத்தல்

பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா

நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா ஒன்பது சுற்றுகளிலும் தோல்வியையே சந்திக்காமல் 7.5 புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

சிறந்த ஃபார்மில் இருந்த 16 வயதான முதல் நிலை வீரர் பிரக்ஞானந்தா, நார்வே செஸ் குரூப் ஏ ஓபன் செஸ் போட்டியில் நடைபெற்ற ஒன்பது சுற்றுகளிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஆட்டத்தில் சர்வதேச மாஸ்டரான இந்திய வீரர் பிரணீத்தை வென்றதன் மூலம் பட்டத்தை வென்றார்.

பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தில் உள்ள இஸ்ரேலின் மார்செல் எஃப்ரோய்ம்ஸ்கி மற்றும் ஸ்வீடனில் ஜங் மின் சியோ ஆகியோரை விட ஒரு புள்ளி முந்தி இந்த வெற்றியை பதிவு செய்தார்.

இந்த போட்டியில் 9-வது சுற்றில் பிரணீத், விக்டர் மிகலேவ்ஸ்கி (8-வது சுற்று), விட்டலி குனின் (6-வது சுற்று), முகமது சோகித் சுயரோவ் (4-வது சுற்று), செமன் முதுசோவ் (சுற்று 2) மற்றும் மத்தியாஸ் உன்னலேண்ட் (சுற்று 1) ஆகியோரை வென்றார். தனது மற்ற மூன்று ஆட்டங்களையும் டிரா செய்தார்.

இந்திய இளம் நட்சத்திர வீரரான பிரக்ஞானந்தா சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். செசபிள் மாஸ்டர் போட்டியில் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக தோற்கடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். அடுத்த மாதம் சென்னையில் நடக்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரக்ஞானந்தா சாதனைகளை பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in