கிரிக்கெட் வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் மோடி; வைரலாகும் வீடியோ!

டிரெஸ்ஸிங் ரூமில் கிரிக்கெட் வீரர்களுடன் மோடி...
டிரெஸ்ஸிங் ரூமில் கிரிக்கெட் வீரர்களுடன் மோடி...
Updated on
1 min read

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், போட்டிக்கு பின்னர், இந்திய வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு (ஓய்வறை) சென்ற பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொருவருக்கும் கை கொடுத்தும், அரவணைத்தும் ஆறுதல் தெரிவித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்டேடியத்தில் மோடி, அமித் ஷா
ஸ்டேடியத்தில் மோடி, அமித் ஷா

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவி கோப்பையை இழந்தது. இப்போட்டி நடைபெற்றபோது பிரதமர் நரேந்திர மோடி மைதானத்துக்கு நேரில் வந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். இருப்பினும் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஆட்டம் முடிவடைந்த பிறகு, இந்திய வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்ற மோடி, ஒவ்வொரு வீரராக சந்தித்து கைகுலுக்கியும், அரவணைத்தும் ஆறுதல் தெரிவித்தார்.

முதலில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரின் கைகளையும் பிடித்துப் பாராட்டினார். பின்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கை கொடுத்தார். அதேபால், ரவீந்திர ஜடேஜா, சுப்மான் கில், ஷமி, பும்ரா என ஒவ்வொரு வீரராக பிரதமர் மோடி கைகொடுத்தும், அரவணைத்தும் வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in