தீபாவளியை மேலும் சிறப்பு மிக்கதாக மாற்றியது இந்திய அணி! பிரதமர் மோடி வாழ்த்து!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நெதர்லாந்தை 160 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தீபாவளியை மேலும் சிறப்பு மிக்கதாக ஆக்கியுள்ளதாக  இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவின் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதியது.

இந்தப் போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தீபாவளியை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றியதற்கு நமது கிரிக்கெட் அணிக்கு நன்றி. நெதர்லாந்துக்கு எதிராக அபாரமான வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இதுபோல்  அரையிறுதியிலும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in