ரோகித் சர்மாவை அடித்துக் கொண்டாடிய விராட் கோலி: ஆஸ்திரேலிய வெற்றிக்குப் பின் நெகிழ்ச்சி!

ரோகித் சர்மாவை அடித்துக் கொண்டாடிய விராட் கோலி: ஆஸ்திரேலிய வெற்றிக்குப் பின் நெகிழ்ச்சி!

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான த்ரில் வெற்றியை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா படிக்கட்டில் அமர்ந்து, அடித்துக்கொண்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

ஹைதராபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவில் வெற்றிக்குப் பிறகு கோலியும் ரோகித்தும் மைதானத்தின் படிக்கட்டுகளில் ஒருவரையொருவர் ஜாலியாக அடித்துக்கொண்டு கட்டித்தழுவுவதைக் காணலாம். இவர்களின் கொண்டாட்டம் குறித்து பேசிய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, "இந்த இருவருக்கும் இடையிலான பந்தம் பெர்பெக்‌ஷனுக்கு அப்பாற்பட்டது. இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தரப்பில் சூர்யகுமார் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 69 ரன்களையும், விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா விளையாடிய போது வெற்றிக்கு 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஒரு பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெற வைத்தார் பாண்ட்யா. இதைத்தான் கோலியும், ரோகித் சர்மாவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இந்தியா கைப்பற்றியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in