பும்ராவின் குழந்தைக்கு பரிசளித்த ஷாகின்ஷா அப்ரிடி! நெகிழ்ந்த ரசிகர்கள்!

பும்ராவின் குழந்தைக்கு பரிசளித்த ஷாகின்ஷா அப்ரிடி! நெகிழ்ந்த ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவிற்கு குழந்தைப் பிறந்த தகவல் வெளியான நிலையில், மைதானத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகின்ஷா அப்ரிடி, பும்ராவிடம் குழந்தைக்கு பரிசளித்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி இந்திய கிரிக்கெட் ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதுமே ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியா,  பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான போட்டி என்றால், அது இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்கிற அளவில் உலக கிரிக்கெட் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

மைதானத்தில் விளையாடும் இரு அணி வீரர்களும் கூட அந்த அளவுக்கு அனல் பறக்க வெறியோடு விளையாடுவார்கள். அணி வீரர்களுக்கு இடையே மைதானத்தில் மோதல்கள் நடப்பதும் அண்மைக்காலம் வரை வாடிக்கையாக இருந்து வந்தது. 

ஆனால் தற்போது இப்படியான நிலைமைகள் எல்லாம்  மாறி வருகிறது. மைதானத்தில் மோதிக்கொள்ளும் வீரர்கள் மைதானத்திற்கு வெளியே நல்ல நட்பு பாராட்டுகிறார்கள்.  இந்திய அணியின் மூத்த மற்றும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளின் போதும் அந்த அணியின் வீரர்களுடன் நல்ல நட்பை காட்டுகிறார்கள். பாகிஸ்தான் அணி வீரர்களும் அதே அளவு நட்பு பாராட்டுகிறார்கள்.

இந்தியா பாகிஸ்தான் அணியின் வீரர்களின் இந்த நட்புக்கு  வலிமை சேர்க்கும் விதமாக அண்மையில் நடந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதலின்போது ஒரு  நிகழ்வு நடந்திருக்கிறது.  இந்திய வீரர் பும்ரா மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷாகின்ஷா அப்ரிடிக்கும் இடையேயான அந்த  நிகழ்வின் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கிறது.

நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பாக மனைவியின் பிரசவத்திற்காக பும்ரா நாடு திரும்பியிருந்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதற்காக  பும்ரா இலங்கை திரும்பினார். அப்போது ஷாகின்ஷா அப்ரிடி, பும்ராவை எதிர்கொண்டு,  பிறந்த குழந்தைக்கு தன்னுடைய வாழ்த்துகளையும், தான் தயாராக வாங்கி வைத்திருந்த  பரிசையும் வழங்கினார். 

இந்நிகழ்வு குறித்த வீடியோ வைரலாக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இரண்டு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருமே இதனை வெகுவாக வரவேற்று பாராட்டுகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in