இந்தியா- நியூசிலாந்து போட்டி முடிவு ஃபிக்ஸ் செய்யப்பட்டது தான்: பாகிஸ்தான் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி
பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி
Updated on
2 min read

நேற்றைய இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியின் முடிவு ஃபிக்ஸ் செய்யப்பட்டது என்று பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி குற்றம்சாட்டியுள்ளார்.

விக்கெட் வீழ்த்திய சமியை பாராட்டும்  ரோகித் சர்மா.
விக்கெட் வீழ்த்திய சமியை பாராட்டும் ரோகித் சர்மா.

உலகக்கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடினர்.

ரோகித் ஷர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்ததுடன், 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டியின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்தது. அதிக சதம் அடித்த டெண்டுல்கரின் சாதனையை கோலி நேற்று முறியடித்தார்.

வெற்றிக் களிப்பில் இந்திய அணி
வெற்றிக் களிப்பில் இந்திய அணி

இதைதொடர்ந்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களிமிறங்கியது. அந்த அணியின் வில்லியம்சன் அரை சதம் அடித்து 69வது ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் சதம் அடித்து 134 ரன்னில் அவுட்டானார்.

இந்நிலையில், 48.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 327 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. இந்திய அணி வீரர் முகமது ஷமி 7 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் உலகக்கோப்பை இறுதிப் போட்டிற்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி
பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி

இந்த நிலையில், நேற்றைய அரை இறுதிப் போட்டி ஃபிக்ஸ் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி குற்றம் சாட்டியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியதில் இருந்து எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய ட்விட்டுகளை ஷின்வாரி பதிவிட்டு வருகிறார்.

"வங்கதேச அணியால் மட்டுமே இந்திய அணிக்கு நல்ல பாடம் கற்பிக்க முடியும்" என்று அவர் போட்ட ட்விட்டுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், “இந்தியர்கள் ஏன் பாகிஸ்தான் - வங்க தேச நட்பைப் பார்த்து இவ்வளவு பொறாமைப்படு கிறார்கள்? 1971-ல் எங்களை உடைத்த போதிலும், இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட்டில் நாங்கள் இரு நாடுகளும் ஒருவரையொருவர் ஆதரிப்பது அவர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று அவர் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியை விமர்சித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய அணி வீரர்கள் நல்ல நடிகர்கள். போட்டியில் அவர்கள் வெல்வது ஃபிக்ஸ் செய்யப்பட்ட நிலையிலும் விளையாடுவது போல நடிக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார். நடிகை சேஹர் ஷின்வாரியின் இந்த பதிவிற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in