பரபரப்பு... பெங்களூரு ஸ்டேடியத்தில் ஒலித்த 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்'... வைரலாகும் வீடியோ!

முழக்கமிட்ட பாகிஸ்தான் ரசிகர்
முழக்கமிட்ட பாகிஸ்தான் ரசிகர்

பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியின் போது 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என அந்நாட்டு ரசிகர் முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா போட்டி
பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா போட்டி

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அப்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள்
வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள்

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையே போட்டி பரபரப்பாக இருந்தது. தொடர் தோல்வியில் இருந்த ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ரன்களைக் குவித்ததால் அந்த அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் ரசிகர்
பாகிஸ்தான் ரசிகர்

இந்தப் போட்டியைக் காண பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ரசிகர்கள் வந்திருந்தனர். தங்கள் நாட்டு அணி வீரர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் எழுப்பினர். இந்த நிலையில், பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படியெல்லாம் முழக்கமிடக்கூடாது என்று ஒரு போலீஸ்காரர், அந்த ரசிகரிடம் வலியுறுத்தினர்ர். அதற்கு “பாகிஸ்தான் சே ஹூன் மெயின், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ நஹி போலேங்கே தோ க்யா போலேங்கே? (நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன், நான் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று சொல்லவில்லை என்றால், என்ன சொல்ல வேண்டும்),” என்று அந்த ரசிகர் போலீஸ்காரரிடம் கேள்வி எழுப்பினார்.

இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர் ஒருவர் தனது சொந்த தேசத்தை ஆதரிக்க அனுமதிக்காத காவல்துறை அதிகாரியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in