தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி - டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்!

பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா
பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்க உள்ளது.

தென்னாப்பிரிக்கா இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றியும், 3ல் தோல்வியையும் கண்டுள்ளது.

இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்க அணிக்கான அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகும். அதேநேரம், இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி என்ற நிலையுடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது. இதில் தோல்வியடைந்தால் அந்த அணி லீக் சுற்றுடன் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in