தென் ஆப்பிரிக்காவை பதறவைத்த பாகிஸ்தான்: வாணவேடிக்கை காட்டிய வீரர்கள்!

தென் ஆப்பிரிக்காவை பதறவைத்த பாகிஸ்தான்: வாணவேடிக்கை காட்டிய வீரர்கள்!

இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றிபெற்றது.

டி20 உலகக்கோப்பையில் இன்று சிட்னி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முகமது ரிஸ்வான், பாபர் அசாம், மசூத் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முகமது ஹரிஸ் 11 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து மாயாஜாலம் காட்டினார். அடுத்து களமிறங்கிய இப்திகர் அஹமது மற்றும் ஷதாப் கான் தென்னாப்பிரிக்காவை திணறடித்தனர். ஷதாப் கான் 20 பந்துகளில் அதிவேக அரை சதமடித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 185 ரன்கள் எடுத்தது. ஷதாப் கான் 22 பந்துகளில் 52 ரன்களும், அகமது 35 பந்துகளில் 51 ரன்களும், நவாஸ் 22 பந்துகளில் 28 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் ஆன்ரிச் நார்ஜே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

185 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் டீ காக் ரன் ஏதும் எடுக்காமலும், ரோசோவ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஷகீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் விளையாடிய கேப்டன் பவுமா மட்டும் நம்பிக்கையளிக்கும்படி விளையாடினார். ஆனால் அவரின் விக்கெட்டையும், மார்க்ரமின் விக்கெட்டையும் அடுத்தடுத்து ஷதாப் கான் எடுத்தார்.

இந்த சூழலில் தென் ஆப்பிரிக்க அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னர் டவ்வொர்த் வீவிஸ் முறைப்படி 14 ஓவர்களில் 142 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய அனைவரையும் சொற்ப ரன்களின் சரித்தனர் பாகிஸ்தான் பவுலர்கள். இதனால் 14 ஓவர்களில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாத்தில் தோற்றது தென் ஆப்பிரிக்கா.

பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in