அரையிறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்? - சவால் விடுத்து மோதும் வங்கதேசம்!

அரையிறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்? - சவால் விடுத்து மோதும் வங்கதேசம்!

அடிலெய்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேச அணியை வென்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும்.

இன்றைய போட்டியில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வியடைந்ததால், அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதே சமயத்தில் கடைசிப் போட்டியில் விளையாடமலேயே இந்தியா முதல் அணியாக குரூப் 2 பிரிவிலிருந்து அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. எனவே தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நஜ்முல் உசைன் சாண்டோ சிறப்பாக விளையாடி பாகிஸ்தானுக்கு கிலியூட்டினார். ஆனால் மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாண்டோ 45 ரன்களும், அபிப் உசைன் 24 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 129 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in