தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி வெற்றி பெற 271 ரன்னை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஷாவுத் ஷகில் ஆகியோரின் அரை சதத்தால் பெரும் சரிவில் இருந்து மீண்டது.
இந்த இணையைத் தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், அந்த அணி 46.4 ஓவரில் 270 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் தப்ரியாஸ் ஷாம்ஷி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜென்சன் 3 விக்கெட்டுகளயும் வீழ்த்தினர்.
இதையடுத்து 271 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியுள்ளது. அந்த அணி வெற்றி பெற்றுள்ள அனைத்து போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்து ரன் குவித்திருந்தது. நெதர்லாந்திடம் தோற்ற போட்டியில் ரன் சேஸ் செய்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து அணியை விட பாகிஸ்தான் பந்துவீச்சு சிறப்பாக இருக்கும் என்பதால், தென்னாப்பிரிக்கா அணி அதனை சமாளிக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போது தென்னப்பிரிக்கா 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!