பாகிஸ்தான் தோல்விக்கு நடுவரே காரணம்....கொந்தளிக்கும் ஹர்பஜன் சிங்!

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

நடுவரின் தவறான தீர்ப்பால் தான் பாகிஸ்தான் அணி நேற்று தோல்வி அடைந்து என்றும் மோசமான சில விதிகளை ஐசிசி மாற்ற வேண்டுமென முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டி மிகவும் பரபரப்பான ஒன்றாக அமைந்தது.

இந்தப் போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மூலமாக ஒரு புதிய விவாதம் சமூக வலைதளத்தில் உருவாகி இருக்கிறது.

தற்போதைய கிரிக்கெட்டில் எல்பிடபிள்யூ அவுட்டுக்காக நடுவரிடம் முறையிடும்போது, நடுவர் அவுட் கொடுத்து, பேட்ஸ்மேன் ரிவ்யூக்கு செல்லும் போது பந்து 50 சதவீதத்திற்கும் குறைவாக ஸ்டெம்பில் பட்டாலும் அவுட் கொடுக்கப்படும்.

சோகத்தில் பாகிஸ்தான் வீரர்கள்
சோகத்தில் பாகிஸ்தான் வீரர்கள்

அதேபோல் பந்துவீச்சு தரப்பு எல்பிடபிள்யூவுக்கு முறையீடு செய்யும் பொழுது நடுவர் அவுட் தரவில்லை என்றால், பந்துவீச்சு தரப்பு ரிவ்யூவுக்கு செல்லும் போது, பந்து 50 சதவீதம் மேல் ஸ்டெம்பில் பட்டிருந்தால் மட்டுமே அவுட் தரப்படும். பாதி பந்துக்கு குறைவாக ஸ்டெம்பில் படுவதாக தெரிந்தால் அவுட் தரப்படாது.

தற்போது இப்படியான விதிதான் இந்த அவுட் முறைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அம்பையர்ஸ்-கால் என்று சொல்லப்படுகிறது. இது இரண்டு வேறுவிதமாக இருப்பதால், தற்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த போட்டியில், ஹாரிஸ் ரவுப் கடைசி விக்கெட்டாக வந்த ஷாம்சிக்கு வீசிய பந்து அவருடைய பேடில் பட்டது. இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

அதே சமயத்தில் பாகிஸ்தான அணி ரிவ்யூவுக்கு சென்ற போது பந்து ஸ்டெம்பை உரசிச் செல்வது தெரிந்தது. பந்து 50 சதவீதத்திற்கு மேல் ஸ்டெம்பில் படாத காரணத்தினால், அவுட் வழங்கப்படவில்லை. தற்போது இதுதான் சர்ச்சையாக மாறியுள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில் ” மோசமான அம்பையரிங் மற்றும் மோசமான விதிகளால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றது. பந்து ஸ்டெம்பில் பட்டால் அம்பையர் அவுட் கொடுத்தாரா, இல்லையா என்பது முக்கியமற்றது. அவுட் தான் கொடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் தொழில்நுட்பத்தால் என்ன பயன்? ஐசிசி இந்த விதியை மாற்ற வேண்டும்!” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!

பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!

அதிர்ச்சி… இளம் கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in