38 ரன்னில் முடங்கிய ஹாங்காங்: சூப்பர் 4க்கு முன்னேறிய பாகிஸ்தான்!

38 ரன்னில் முடங்கிய ஹாங்காங்: சூப்பர் 4க்கு முன்னேறிய பாகிஸ்தான்!

சார்ஜாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் நிஜாகத் கான் பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய அழைத்தார். பாகிஸ்தானின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் 9 ரன்களின் கேட்ச் ஆனார். அதன்பின்னர் முகமது ரிஸ்வான் மற்றும் பஹர் ஜமால் இணைந்து அதிரடி காட்டினார்கள். ஜமால் 41 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக இறங்கிய குஷ்தில் ஷா ஹாங்காங் பந்துவீச்சை தெறிக்க விட்டார். கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்களை விளாசினார் அவர். இதன்காரணமாக அந்த அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி கடைசி 5 ஓவரில் மட்டும் 77 ரன்கள் எடுத்தது. ரிஸ்வான் 78 ரன்களையும், குஷ்தில் ஷா 35 ரன்களையும் எடுத்தார்.

194 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த கழட்டியது பாகிஸ்தான். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஒன்றை இலக்கத்தில் அனைத்து வீரர்களும் அவுட் ஆனார்கள். 10.4 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே எடுத்து அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷதப் கான் 4 விக்கெட்டுகளையும், முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

ஏற்கெனவே இந்திய அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, ஹாங்காங் அணியை வீழ்த்தியதன் மூலமாக ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 38 ரன்களில் வாரி சுருட்டி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in