பாகிஸ்தானுக்கு அடித்தது அதிர்ஷ்டம்: வங்கதேசத்தை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது!

பாகிஸ்தானுக்கு அடித்தது அதிர்ஷ்டம்: வங்கதேசத்தை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது!

இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இன்று காலையில் நடந்தப் போட்டியில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வியடைந்ததால், அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அதே சமயத்தில் கடைசிப் போட்டியில் விளையாடமலேயே இந்தியா முதல் அணியாக குரூப் 2 பிரிவிலிருந்து அரையிறுதிக்குள் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும் சூழல் உருவானது.

பரபரப்பான கட்டத்தில் அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நஜ்முல் உசைன் சாண்டோ சிறப்பாக விளையாடி பாகிஸ்தானுக்கு கிலியூட்டினார். ஆனால் மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாண்டோ 45 ரன்களும், அபிப் உசைன் 24 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷகீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

129 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்து சென்றனர். அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸும் சிறப்பாக ஆடினார். கடைசி கட்டத்தில் ஆடிய மசூத்தும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாகிஸ்தானை வெற்றிபெறவைத்தார். இதனால் 18.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 128 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ரிஸ்வான் 32 ரன்களும், ஹாரிஸ் 31 ரன்களும், பாபர் அசாம் 25 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகீன் அப்ரிடி ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து குரூப் 2 பிரிவில் புள்ளிப்பட்டியலில் 5 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறியுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in