இந்தியாவின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்தது பாகிஸ்தான்: போராடி வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

இந்தியாவின் கடைசி நம்பிக்கையையும் தகர்த்தது பாகிஸ்தான்: போராடி வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!

ஆசியக்கோபையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இலங்கை அணி ஏற்கெனவே இரு வெற்றிகளை பெற்றதால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்வது உறுதியாகிவிட்டது. இதனால் நேற்றைய போட்டி இறுதிப்போட்டிக்கு எந்த அணி செல்லும் என தீர்மானிக்கும் ஆட்டமாக இருந்தது. ஒருவேளை பாகிஸ்தான் இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல சிறு வாய்ப்பு இருந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் நேற்றைய போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்தனர்.

சார்ஜாவில் நேற்றிரவு நடந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சினை தேர்வு செய்தார். பாகிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஓரளவு நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இம்ராகிம் ஜட்ரான் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார்.

அடுத்ததாக ஆடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் பாபர் அசாம் டக் அவுட் ஆனார். சதாப் கான், ரிஸ்வான் மற்றும் அகமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் ஆடினார்கள். ஆனாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியை பதறவைத்தனர் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள். 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த பாகிஸ்தானுக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. பரூக்கி வீசிய பந்தில் 2 சிக்ஸர்களை தெறிக்கவிட்டு அணியை வெற்றிபெற வைத்தார் நசீம் ஷா.

ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது, பசல்ஹாக் பரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 36 ரன்களை குவித்த பாகிஸ்தான் அணியின் சதப் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால் இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவு முற்றிலும் நிர்மூலமானது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in