நியூசிலாந்திற்கு எதிரான பலப்பரீட்சை: டாஸ் வென்று பாகிஸ்தான் பந்துவீச்சு!

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணி
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணி

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இரு அணிகளும் அரையிறுதிக்கான பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மாணித்தது. இதையடுத்து நியூசிலாந்து வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். 9.2 ஓவர்களில் கான்வே 27 ரன்களுடனும், ரவீந்திரா 28 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் நியூசிலாந்து 4ல் வெற்றியும், பாகிஸ்தான் 3ல் வெற்றியும் பெற்றுள்ளன. நியூசிலாந்து அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதோடு, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டால், அரையிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகும்.

அதேநேரம் பாகிஸ்தான் அணி கட்டாயம் இன்றைய போட்டியில் மட்டுமல்லாது, இங்கிலாந்துடனான போட்டியிலும் வென்றால் மட்டுமே அரையிறுதி கனவு நிறைவேறும். அதனால், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in