உலகக்கோப்பை கிரிக்கெட்... தொடர் தோல்வியில் இருந்து மீளுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மோதல்
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மோதல்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18வது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடர் தோல்விகளால் துவண்டுள்ள ஆஸ்திரேலிய அணி கட்டாய வெற்றி என்ற முனைப்புடனும், இந்தியாவுடனான படு தோல்வியில் இருந்து மீள இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் பாகிஸ்தான் அணியும் களமிறங்குகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சொதப்பி வரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அந்த அணியால் வெற்றி பெற முடியும். இதனை அறிந்தே பாகிஸ்தான் அணி பந்து வீச தீர்மானித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in