பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த நியூசிலாந்து… 402 ரன் இலக்கு!

ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திரா

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி வெற்றி பெற 402 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது நியூசிலாந்து அணி.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் 35வது உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மாணித்தது. இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 108 ரன்னும், கேப்டன் கேன் வில்லியம் சன் 95 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் சார்பில் முகமது வாசிம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து. 402 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in