பேட் கம்மின்ஸ்
பேட் கம்மின்ஸ்

நாளைய போட்டி மிகப்பெரிய சவால்; எங்கள் இலக்கு இதுதான்… ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்!

``இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே ஆஸ்திரேலிய அணியின் முதல் இலக்கு'' என கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2019ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இரண்டு முறை டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் என நூலிழையில் தவறவிட்டது. இம்முறை அந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என இந்திய அணியும், 6-வது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்போடு ஆஸ்திரேலியா அணியும் களம் காண்கின்றன.

பேட் கம்மின்ஸ்
பேட் கம்மின்ஸ்

இந்த நிலையில், இன்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இறுதிப் போட்டிக்கான திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நாளைய போட்டி மிகப்பெரிய சவால். 1 லட்சத்துக்கு 30 ஆயிரம் ரசிகர்கள் முன் விளையாடுவது. எப்படியும் அவர்கள் ஆதரவு முழுக்க இந்தியாவுக்காக இருக்கும். அதனால், எங்கள் முதல் இலக்கு என்பது ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணியை ஒருநாள் தொடரில் நாங்கள் வீழ்த்தியுள்ளோம். மேலும், இந்திய அணிக்கு எதிராக அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ளது எங்களுக்கு உதவியாக இருக்கும். பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in