ரோகித் ஷர்மாவை போல் இன்னொரு வீரர் இல்லை… வாசிம் அக்ரம் புகழாரம்!

வாசிம் அக்ரம், ரோகித் ஷர்மா
வாசிம் அக்ரம், ரோகித் ஷர்மா

உலகக் கோப்பை தொடரில் இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். நெதர்லாந்திற்கு எதிரான நேற்றைய போட்டியிலும் அவர் அதிரடியாக ஆடி 61 ரன் எடுத்தார். இந்நிலையில் ரோகித் ஷர்மாவின் பேட்டிங் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்களான வாசிம் அக்ரம், சோயப் மாலிக் மற்றும் மிஸ்பா உல்ஹக் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில் பேசிய வாசிம் அக்ரம் ரோகித் ஷர்மாவைப் போல் உலக கிரிக்கெட்டில் வேறு பேட்ஸ்மேன் இல்லை என கூறினார். விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் பாபர் அசாம் போன்ற வீரர்களை பற்றிப்பேசுகிறோம். ஆனால், இவர்கள் அனைவரிலிருந்தும் ரோகித் ஷர்மா முற்றிலும் மாறுபட்ட வீரர் என்று கூறினார்.

அவர் அளவுக்கு சர்வ சாதாரணமாக பேட்டிங் செய்யும் வீரர் இல்லை. எந்த சூழலிலும், எப்படிப்பட்ட பந்து வீச்சாளரையும் அடித்து ஆடும் திறமை ரோகித்திற்கு உள்ளதாக அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட சோயப் மாலிக், எதிரணியில் அனைத்து பந்து வீச்சாளர்களையும் அடித்து ஆடுகிறார். வேறு எந்த வீரரும் அவரைப்போல் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எதிர்கொள்பவர் இல்லை என்று புகழாரம் சூட்டினார்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in