உலக்கோப்பை கிரிக்கெட்... வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து முதலிடம்!

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்
நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து – வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

இதையடுத்து, களமிறங்கிய வங்கதேச வீரர்கள் நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாற்றத்துடன் விளையாடினர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 245 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் 66 ரன்னும், மஹமதுல்லா 41 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில் ஃபெர்குசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முஷ்பிகுர் ரஹீம்
முஷ்பிகுர் ரஹீம்

246 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில்லியம் சன் கான்வாய் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கான்வாய் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து களத்திற்கு வந்த மிட்சல் அபாரமாக ஆடி 89 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வில்லியம்சன் 78 ரன் எடுத்திருந்த போது ரிட்டையர் ஹர்ட் ஆகி வெளியேறினார். அந்த அணி 42.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 248 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

  • இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளதோடு, இந்த தொடரில் கோப்பை வெல்லும் தகுதியுடைய அணி என்ற நம்பிக்கையையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in