கெலன் பிலிப்ஸின் சூறாவளி சதம்: இலங்கையை வாரி சுருட்டியது நியூசிலாந்து!

கெலன் பிலிப்ஸின் சூறாவளி சதம்: இலங்கையை வாரி சுருட்டியது நியூசிலாந்து!

கெலன் பிலிப்ஸின் அதிரடி சதத்தால் இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்தெடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆலன், கான்வே ஆகியோர் தலா 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனும் 8 ரனில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அதிர்ச்சியில் இருந்த நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்டினார் கெலன் பிலிப்ஸ். இவர் இலங்கை பந்துவீச்சை நாலாமூலைக்கும் சிதறடித்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை குவித்தது. இதில் பிலிப்ஸ் மட்டும் 64 பந்துகளில் 4 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்களை எடுத்தார்.

அடுத்து 167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் நிசாங்கா டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து மெண்டிஸ் 4 ரன்னிலும், டி சில்வா ரன் ஏதும் எடுக்காமலும், அசலங்கா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி சார்பில் ஷனகா 35 ரன்களையும், ராஜபக்ச 34 ரன்களையும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் சார்பில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், சாண்ட்னெர் மற்றும் இஷ் சோதி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கெலன் பிலிப்ஸ் ஆட்டநாயகனாக தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளில் விளையாடி 5 புள்ளிகளைப் பெற்று உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் குரூப் 1 பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in