தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்: நியூசிலாந்து அணி பந்துவீச்சு!

தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதல்
தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் மோதல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

புனேயில் நடைபெறும் 32வது போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. தென்னாப்பிரிக்கா அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 4ல் முதலில் பேட்டிங் செய்துள்ளது. அதில் அனைத்திலும் 350 ரன்னுக்கு மேல் எடுத்து அபார வெற்றியும் பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் முதலில் களமிறங்க உள்ளது. ஆனால், நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருவதால், தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

அதேநேரம், நியூசிலாந்து அணி கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in