மழையால் கைவிடப்பட்டது நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி: சூப்பர் 12 சுற்றில் அணிகளின் புள்ளிவிவரம்!

மழையால் கைவிடப்பட்டது நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி: சூப்பர் 12 சுற்றில் அணிகளின் புள்ளிவிவரம்!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

மழையினால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட்டதால் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. இன்று காலையில் இதே மெல்போர்ன் மைதானத்தில் மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

முன்னதாக கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து தனது முதல் போட்டியில் வெற்றிபெற்றது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.

குரூப் 1 பிரிவில் தலா இரண்டு போட்டிகளில் அனைத்து அணிகளும் விளையாடியுள்ளன. இதில் நியூசிலாந்து அணி 3 புள்ளிகளும், இலங்கை, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா இரு புள்ளிகளும், ஆப்கானிஸ்தான் அணி 1 புள்ளியையும் பெற்றுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in