டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி த்ரில் வெற்றி!

டி20 உலகக்கோப்பை: ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி த்ரில் வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி நெதர்லாந்து த்ரில் வெற்றியைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ள டி20 உலகக்கோப்பை தொடரின், லீக் சுற்று இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐக்கிய அமீரகம் அணி முதலில் பேட் செய்தது. யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முகமது வசீம் நிலைத்து ஆடி 41 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன்கள் எடுக்கத் திணறினார்கள். விர்தியா அரவிந்த் 18 ரன்களையும், காசிப் டவுடு 15 ரன்களும் எடுத்தனர். இதனால் ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

113 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணியும் ஐக்கிய அரபு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதன் காரணமாக அந்த அணியின் பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை என்ற சூழலில் எட்வார்ட்ஸ் மற்றும் லோகன் வான் பீக் ஆகியோர் களத்தில் இருந்தனர். பொறுப்பாக விளையாடி ஒவ்வொரு ரன்களாக எடுத்த இவர்கள், கடைசி ஓவரின் கடைசி பந்து மிச்சம் இருக்கையில் அணியை த்ரில் வெற்றி பெற வைத்தனர். இதனால் 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி 112 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓ டோட் 23 ரன்களையும், அக்கெர்மான் 17 ரன்களையும்,எட்வார்ட்ஸ் 16 ரன்களையும் எடுத்தனர். நெதர்லாந்து அணியின் சார்பில் 3 விக்கெட்டுகளையும், 14 ரன்களையும் எடுத்த பாஸ் டெ லீடே ஆட்டநாயகனாக தேர்வானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in