இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி வெற்றி பெற நெதர்லாந்து 263 ரன்னை இலக்காக நிர்ணயித்துள்ளது.
லக்னோ நகரில் நடைபெற்று வரும் 19வது லீக் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சைபிராண்ட் ஏங்கல்ப்ரீச், லோகன் வான் பீக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இதன் மூலம் அந்த அணி 49.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன் எடுத்தது. ஏல்கல்பீரிச் 70 ரன்னும், லோகன் 59 ரன்னும் எடுத்தனர். இலங்கை சார்பில் மதுஷங்கா, ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
263 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கி விளையாட உள்ளது. கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களை சுருட்டிய நெதர்லாந்து வீரர்கள், இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்களா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.