2025 சாம்பியன்ஸ் போட்டியில் பங்கேற்கப் போவது யார்? நெதர்லாந்து- இங்கிலாந்து இன்று பலபரீட்சை!

இங்கிலாந்து - நெதர்லாந்து
இங்கிலாந்து - நெதர்லாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை தவறவிட்ட நெதர்லாந்து - இங்கிலாந்து அணிகள், 2025ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்குபெறும் முனைப்போடு இன்று மோதுகின்றன.

இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகளுடன் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் நேரடியாக தகுதி பெறும்.

இந்தவகையில் இங்கிலாந்து அணி தனது கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் கணிசமான ரன் ரேட்டில் வெற்றி பெறுவது அவசியம். அப்போதுதான் புள்ளிகள் பட்டியலில் 8 இடங்களுக்குள் நிலைபெற முடியும். 4 ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஆக்ரோஷ அணுகுமுறையால் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி இம்முறை மோசமான செயல் திறனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பலம் குறைந்த அணிகளிடம் கூட தோல்வியை சந்தித்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தும் இங்கிலாந்து அணிக்கு சவால் தரக்கூடும் என்றே கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in