நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா: அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா?

நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது தென்னாப்பிரிக்கா: அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா?

இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றின் கடைசிப் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியுடன் இன்று மோதியது. அடிலெய்டு மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச தீர்மானித்தது. நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸ்டீபன் மைபர்க் மற்றும் மேக்ஸ் ஓ டாவ்ட் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மைபர்க் 37 ரன்னிலும், டாவ்ட் 29 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய டாம் கூப்பர் மற்றும் கொலின் அக்கர்மான் ஆகியோரும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அக்கர்மான் 26 பந்துகளில் 41 ரன்களும், கூப்பர் 19 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர்.

159 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள், நெதர்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ப்ராண்டன் க்ளோவர், ப்ரெடு கிளாசன் மற்றும் பாஸ் டீ லீடி ஆகியோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரோஸோவ் 25 ரன்களும், க்ளாசென் 21 ரன்களும், பவுமா 20 ரன்களையும் எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் க்ளோவர் 3 விக்கெட்டுகளையும், கிளாசன் மற்றும் டீ லீடி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நெதர்லாந்து அணியின் அக்கர்மான் ஆட்டநாயகனாக தேர்வானார்.

5 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 புள்ளிகளுடன் தற்போது வரை 2ம் இடத்தில் உள்ளது. ஆனாலும் இன்று நடைபெறும் பாகிஸ்தான் - வங்கதேசம் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in