ஆச்சர்யம் நிகழ்த்திய நெதர்லாந்து... வங்கதேச அணிக்கு சவால் இலக்கு!

நெதர்லாந்து - வங்கதேச அணிகள் மோதல்
நெதர்லாந்து - வங்கதேச அணிகள் மோதல்

வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அந்த அணி வெற்றி பெற 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் 28வது லீக் போட்டியில் வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. தொடக்கம் முதலே திணறிய நெதர்லாந்து அணி வீரர்கள் மிக சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்காட் எட்வார்ட்ஸ் 68 ரன்னும், வெஸ்லே பரேஸி 41 ரன்னும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் ஷோரிபுஃல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத், முஸ்தபிஷூர் ரஹ்மான், மெஹதி ஹாசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 230 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்க உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in