நெதர்லாந்து - இலங்கை
நெதர்லாந்து - இலங்கை

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி... டாஸ் வென்று நெதர்லாந்து பேட்டிங்!

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

லக்னோவில் நடைபெற்று வரும் 19வது லீக் போட்டியில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டத்தை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. அந்த அணி 8 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன் எடுத்திருந்தது.

இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் இலங்கை அணி படு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வென்று உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பெறும் என அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே நேரம் தென்னாப்பிரிக்க அணிக்கு அதிர்ச்சியளித்த நெதர்லாந்து, இந்த போட்டியில் அதே உற்சாகத்துடன் களமிறங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in