மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமனம்!

லசித் மலிங்கா
லசித் மலிங்கா

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 5 கோப்பை வென்ற அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். லசித் மலிங்கா ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2020ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் முன்னணி பந்து வீச்சாளராக விளையாடியுள்ளார்.

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஷேன் பாண்ட் விலகியதைத் தொடர்ந்து, அந்த பொறுப்பிற்கு மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. விரைவில் அவர் மார்க் பவுச்சர் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோர் அடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குழுவில் இணையவுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in