‘இது எனக்கு வேணும்...’ ரசிகரிடமிருந்து தோனி கேட்டு வாங்கிய பொருள்! வைரலாகும் வீடியோ!

ரசிகருடன் தோனி
ரசிகருடன் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதையை சென்னை அணியின் தலயுமான தோனி சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, நியூயார்க் நகரில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் அல்கார்ஸ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெர்வ் ஆகியோர் மோதிய கால்இறுதி ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை காண சென்ற தோனி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை காண சென்ற தோனி
டிரம்புடன் தோனி
டிரம்புடன் தோனி

தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த தோனி, அவருடன் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து இருவரும் கோல்ப் விளையாடும் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், அமெரிக்காவில் தோனி தனது ரசிகர் ஒருவரிடம் இருந்து சாக்லெட்டை திருப்பி கொடுங்கள் என்று கேட்டு வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனியை ரசிகர்கள் சிலர் சாலையில் சந்தித்துள்ளனர்.

ரசிகையிடம் இருந்து பூங்கொத்து வாங்கிய தோனி
ரசிகையிடம் இருந்து பூங்கொத்து வாங்கிய தோனி

அப்போது பெண் ரசிகை ஒருவர் தோனிக்கு சாக்லேட்டும், பூங்கொத்தும் அன்பளிப்பாக வழங்கினார். பிறகு அந்த ரசிகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனை தொடர்ந்து ஆண் ரசிகர் ஒருவர் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஆட்டோகிராப்பும் கேட்டார். அப்போது ஆட்டோகிராப் போட்டுக் கொடுப்பதற்கு தன் கையில் வைத்திருந்த சாக்லேட் இடைஞ்சலாக இருந்ததால் அதை ரசிகரிடம் கொடுத்தார் தோனி.

ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தற்கு பின்னர் ரசிகரிடம் இருந்த சாக்லெட்டை திருப்பி கொடுங்கள் என கேட்டு தோனி பெற்றார். இதனை கேட்டவுடன் அங்கிருந்த ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in