திடீரென ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்: என்ன காரணம்?

திடீரென ஓய்வை அறிவித்தார் மிதாலி ராஜ்: என்ன காரணம்?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் போட்டியில் அசத்தி வந்தவர் மிதாலி ராஜ். இவரது தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். தமிழை தாய்மொழியாக கொண்ட மிதாலி ராஜ், ஒருநாள் சர்தேச கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை குவித்து சாதித்துள்ளார். 232 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 7,805 ரன்களை குவித்துள்ளார். இதுவரை 6 உலக கோப்பையில் விளையாடி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் மிதாலி ராஜ்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் இன்று திடீரென அறிவித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், இந்திய அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக வழிநடத்தியது பெருமையாக உள்ளது என்றும் இந்திய அணிக்காக விளையாடியதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்றும் என் விளையாட்டை ஊக்குவித்து, ஆதரவு தெரிவித்த எனது ரசிகர்களுக்கு நன்றி என்றும் வீராங்கனையாக எனது பணி நிறைவடைந்தாலும், மகளிர் கிரிக்கெட்டுக்காக எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in